Cutetamil.net Poems

Cutetamil.net Poems

cute tamil poems

For more poems : http://cutetamil.net

பேசிவிடு என்னோடு....

LovePosted by theepz Wednesday, May 09 2007 01:07:07
நான் கவிதை எழுதத்
துவங்கும் பொதெல்லாம்
என் நினைவு உன்னிடமே செல்கிறது
இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ
எப்படி ரசிப்பாய் என்று........

நான் எழுதிய கிறுக்கல்கள்
கவிதை என்று - உன்னைப்
பார்த்த பின்தான்
புரிந்தது எனக்கு.......

எழுத்துக்களின் அழகு - உன்
பெயரை எழுதும்போதுதான்
தெரிந்தது எனக்கு........

மொழியின் இனிமை
நீ பேசுகையில்தான்
புரிகிறது எனக்கு...........

இதழ்வழி பேசும்
வார்த்தைகளை விட
உன் விழிவழி கூறும்
கவிதைகள் நன்றாய்ப்
புரிகி‎ன்றன எனக்கு...........

உன்னைக் கண்ட நாள் முதலாய்
இப்படிப்
புலம்பிகொண்டுதான்
இருக்கிறேன், தினம் தினம்.........

என் புலம்பலின் விடுமுறையாய்
இன்றாவது பேசிவிடு
என்னோடு
.
  • Comments(12)//poems.cutetamil.net/#post5

தொலைந்துபோகிறேன்

LovePosted by theepz Wednesday, May 09 2007 01:04:50
கொள்ளி வைத்து விட்டாய்

தீக்குச்சி

யாருடையதாய்

இருந்தால் என்ன?!!

சந்தோசம் இல்லாமலே

வாழக் கற்றாகிவிட்டது

பிழிந்து எடுக்கும்

துயரங்களுக்கு நடுவில்

எனக்கு பிடிக்கலாம்

பைத்தியம்!

துயரத்துக்கு என்று தான் விடிவு??

விடை தேடும் கூட்டத்தோடு

கூட்டமாய் தொலைந்து போகிறேன்
  • Comments(4)//poems.cutetamil.net/#post4

வசந்த நினைவுகள்

LovePosted by theepz Wednesday, May 09 2007 01:03:00

Blog Image

எவ்வளவோ பேசினோம்

இரவு பகலென்று பாராமல்

இருந்தும்

மறக்க முடியவில்லை!!

"ஐ லவ் யூ" என்று போனில்

முத்தமிட்ட ஓசை இன்னும்

என்னிடம் ஒலித்து கொண்டே

உள்ளது!

என் இதயத்துடிப்பை போல....

  • Comments(3)//poems.cutetamil.net/#post3
« Previous